2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள சர்வதேச நாணய நிதியம்(IMF) தீர்மானித்துள்ளது.
இலங்கை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்ததாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடன் உதவி 48 மாத காலத்திற்காக வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, விரிவான கடன் திட்டத்தில் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடன் சுமையில் இருந்து நாட்டை மீட்டெடுத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் மோசமடையாத விதத்தில் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.